ஆபத்தான முறையில் மரத்தில் ஏறி பாடம் படிக்கும் மாணவர்கள்

ஆபத்தான முறையில் மரத்தில் ஏறி பாடம் படிக்கும் மாணவர்கள்

1 mins read
79401952-e049-44a5-94c5-c65b6c66dcc5
கடந்த ஓர் ஆண்டாக உயிரைப் பணயம் வைத்து, ஆலமரக் கிளைகளில் அமர்ந்து இணைய வகுப்பில் பாடம் கற்கும் மாணவர்கள். படம்: ஊடகம் -

நாமக்­கல்: கைபே­சி­யில் 'வைஃபை' தொடர்பு சரி­யான முறை­யில் கிடைக்­கா­த­தால், கல்வி கற்­ப­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கும் மாண­வர்­கள் தங்­கள் கிரா­மத்­தில் உய­ர­மாக வளர்ந்­துள்ள ஆல­ம­ரத்­தின் கிளை­கள் மீது அமர்ந்து இணை­யக் கல்­வி­யைப் பயின்று வரு­கின்­ற­னர்.

இது­போல் மரத்­தில் ஏறி படிக்­கும்­போது, கீேழ விழுந்து கை கால் முறிந்­தால் என்­னா­வது என மாண­வர்­க­ளின் பெற்­றோர் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

தின­மும் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை உயி­ரைப் பண­யம் வைத்து தங்­க­ளது பிள்­ளை­கள் படிப்­பைத் தொடர்ந்து வரு­வ­தா­க­வும் சொல்­கின்­ற­னர்.

நாமக்­கல் மாவட்­டம், முள்­ளுக்­கு­றிச்சி அருகே பெரப்­பஞ்­சோலை, பெரி­ய­கோம்பை என்ற பகு­தி­கள் உள்­ளன. இங்கு கைபேசி கோபு ரங்­கள் இல்­லா­த­தால், கைபே­சி­யில் பேசு­வ­தற்கே சரி­யான சமிக்ஞை கிடைக்­கா­மல் அவ­திப்­ப­டு­வர்.

இந்­நி­லை­யில், இங்கு வசிக்­கும் 20க்கும் மேலான மாண­வர்­கள் கல்­லூரி, பள்­ளி­களில் படித்து வரு­கின்­ற­னர்.

தற்­போது ஊர­டங்கு கார­ண­மாக பள்ளி, கல்­லுா­ரி­கள் மூடப்­பட்­டுள்ள தால் இணை­யம் வாயி­லாக பாடம் பயின்று வரு­கின்­ற­னர்.

பாடம் சம்­பந்­தப்­பட்ட காெணாளி, இணைய வகுப்­பு­களைக் கவ­னிக்க வேண்­டுமெனில் 5 கி.மீ. தூரம் செல்ல வேண்­டும். மாண­வர்­க­ளின் நலன்­க­ருதி அப்­ப­கு­தி­யில் கைபேசி கோபுரம் அமைக்க மாவட்ட நிர்­வா­கம் ஏற்­பாடு செய்யவேண்­டும் என அப்பகுதி மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.