போலிஸ்காரரின் தந்தைக்கு ஒரே நேரத்தில் இரு முறை தடுப்பூசி; போலிசில் புகார்

தேனி: தேனி­யில் போலிஸ்­கா­ரர் ஒரு­வ­ரின் தந்­தைக்கு ஒரே நேரத்­தில் இரு முறை தடுப்­பூசி போடப்­பட்­டது பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இது­கு­றித்து நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர், தேனி காவல் நிலை யத்­தில் புகார் ெகாடுத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

தேனி கோட்­டைக்­க­ளம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சந்­தி­ர­சே­கர், 65. இவர் அங்­கி­ருந்த தடுப்­பூசி மையத்­துக்கு இரண்டாவது தவணை கோவி­ஷீல்ட் தடுப்­பூசி போடுவதற்காக வந்திருந்தார்.

இதையடுத்து, அவ­ரு­டைய ஆதார் விவ­ரங்­களைச் சரி­பார்த்து விட்டு தாதி ஒரு­வர் 2வது தவணை தடுப்­பூ­சி­யைச் செலுத்­தி­னார். அவரை சிறிது நேரம் காத்­தி­ருந்து செல்­லும்­படி தாதி கூறி­னார்.

இத­னால் அவர் அப்­ப­கு­தி­யில் அமர்ந்­தி­ருந்­தார். அப்­போது திடீ­ரென அங்கு வந்த மற்­றொரு தாதி மீண்­டும் அவ­ருக்கு தடுப்­பூசி போட்­டார். இதை­ய­டுத்து அவர் தனக்கு சில நிமி­டத்­துக்கு முன்­பு­தான் தடுப்­பூசி போடப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

தாதி­யரின் கவ­னக்­கு­றை­வால் ஒரே நேரத்­தில் சந்­தி­ர­சே­க­ருக்கு இரு­முறை தடுப்­பூசி போடப்­பட்ட சம்­ப­வத்­தால் மருத்­து­வக் குழு­வி­னர் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இந்நிலை­யில், கூடு­த­லாக தடுப்­பூசி போட்­ட­தால் எந்­தப் பாதிப்­பும் ஏற்­ப­டாது என்று சந்­தி­ர­சே­க­ரி­டம் மருத்­து­வக் குழு­வி­னர் விளக்­கம் அளித்தனர்.

எனினும் சந்திரசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!