சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தீர்மானம்

1 mins read
1ee7c735-0d23-458c-ad25-de291aa977ba
அதிமுக எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம்.நடுவில் சசிகலா.படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: மறைந்த முன்­னாள் முதல்­வர் ெஜய­ல­லி­தா­வின் தோழி சசி­கலா அதி­மு­க­வின் பொதுச் செய­லா­ள­ராக பொறுப்­பேற்க வேண்­டும் என்று கோவில்­பட்டி அதி­முக நிர்­வா­கி­கள் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஆட்­சியை இழந்­தது முதல், எதிர்க்­கட்சி வரி­சைக்குச் சென்­றுள்ள அதி­முக தலை­வர்­கள் தினந்­தோ­றும் சசி­கலா­வால் பல நெருக்­க­டி­களை எதிர்கொண்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், தூத்­துக்­குடி மாவட்­டம், கோவில்­பட்­டி­யில் எம்­ஜி­ஆர் இளை­ஞர் அணி இணைச் செய­லா­ளர் ஆறு­முக பாண்­டி­யன் தலை­மை­யில் நடந்த கூட்­டத்­தில், தூத்­துக்­குடி மாவட்ட அதி­மு­க­வின் அனைத்து நிர்­வா­கி­கள், அதி­மு­க­வில் இருந்து நீக்­கப்­பட்ட நிர்­வா­கி­ கள் உள்­ளிட்­டோர் கலந்து­கொண் டனர்.

அப்­போது, கட்சி நிர்­வா­கி­கள், தொண்­டர்­களைக் கட்­சியை விட்டு நீக்கி வரும் எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் ஓ.பன்­னீர்­செல்­வம், பழ­னி­சா­மிக்கு எதி­ராக கண்டனத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

கட்­சி­யின் அடிப்­படை விதி­களுக்கு மாறாக இதே நிலை தொடர்ந்து நீடித்­தால் ஓபி­எஸ், ஈபி­எஸ் இரு­வ­ரை­யும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­குவதற்கு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அத்துடன், ஓபி­எஸ், ஈபி­எஸ்ஸை கட்­சி­யை­விட்டு நீக்க தொண்­டர்­க­ளி­டம் கையெ­ழுத்து இயக்­கம் நடத்தவும் கோவில்­பட்டி அதி­முக நிர்­வா­கி­கள் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.