'பதவியை எதிர்பார்த்து நான் திமுகவில் இணையவில்லை'

'பதவியை எதிர்பார்த்து நான் திமுகவில் இணையவில்லை'

1 mins read
b3fbff01-bfcf-42bb-93e5-d38c786834a1
-

சென்னை: தான் பத­வியை எதிர்­பார்த்து திமு­க­வில் இணைய வில்லை என்றும் தமிழக அரசை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வழி நடத்தும் விதம் தங்களை ஈர்த்­ததால் திமுகவில் வந்து சேர்ந்த தாகவும் தோப்பு வெங்­கடாசலம் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

அதி­மு­க­வில் இருந்து நீக்­கப்­பட்ட முன்­னாள் அமைச்­சர் தோப்பு வெங்­க­டா­ச­லம் சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் முன்­னி­லை­யில் திமு­க­வில் இணைந்­தார்.

அவ­ரு­டன் அவ­ரது ஆதரவாளர்­கள் 905 பேரும் திமு­க­வில் இணைந்­த­னர்.

அதன்­பின்­னர் செய்தியாளர்­க­ளி­டம் பேசி­ய­ அவர், "தமிழக அரசை முதல்­வர் அற்­பு­த­மாக வழி­ந­டத்தி வரு­கி­றார். நேர் வழி­யில் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் அவ­ரு­டைய பாங்கு எங்­களை ஈர்த்­தது. பத­வி­யேற்­ற­தும் பெண்­க­ளுக்­காக அவர் பல்­வேறு திட்­டங்­களைச் செயல்­ப­டுத்­தி­யதை அர­சி­யல் ஆர்வலர்­கள் உற்று கவனித்து வருகிறார்கள். ஸ்டா­லின் சமூக நீதி­யு­டன் செயல்­ப­டு­கி­றார்," என்று பாராட்டினார்.