மது போதை காரணமாக துக்க வீடாக மாறிய திருமண வீடு

மதுரை: மது போைதக்கு அடி­மை­யான தனது மகனை எவ்­வ­ளவு சொல்­லி­யும் திருத்தமுடி­யாத நிலை­யில், மக­னைக் கொன்ற தந்தை வாடிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதனால், கடந்த 11ஆம் ேததி அன்று திரு­ம­ணம் நடை­பெற இருந்த வீடு துக்கவீடாக மாறிய தால், திரு­மண வீடு கண்­ணீ­ரும் கத­று­லு­மாக மாறி­யது.

மதுரை மாவட்­டம், வாடிப்­பட்டி அரு­கே­யுள்ள அய்­ய­ன­க­வுண்­டன் பட்­டி­யைச் சேர்ந்த தொழி­லாளி இளங்­கோ­வ­ன். இவரது மகன் பிர­தீப்­புக்­கும் உசி­லம்­பட்டியைச் சேர்ந்த பெண்­ணுக்­கும் திரு­ம­ணம் நடக்க இருந்­தது.

திரு­மண வேலை­களில் இளங்­கோ­வன் குடும்­பத்­தி­னர் ஈடு­பட்டு வந்­துள்­ள­னர்.

அப்போது, மது குடித்­து­விட்டு நிதானமில்­லா­மல் வீட்­டுக்குத் திரும்பிய மண­ம­கன் பிர­தீப், தன் நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து மீண்­டும் மது அருந்த தந்தை இளங்­கோ­வ­னி­டம் பணம் கேட்­டுள்­ளார்.

"நாளைக்கு திரு­ம­ணத்தை வைத்­துக்கொண்டு இப்­படி அசிங்­கப்­ப­டுத்­து­கி­றாயே!" என்று தந்தை கடு­மை­யா­கத் திட்­டி­யுள்­ளார்.

"பணம் தர­வில்­லை­யென்­றால் திரு­ம­ணம் செய்யமாட்­டேன்," என்று இளங்­கோ­வனுடன் வாக்­கு­வா­தம் செய்துள்ளார் பிர­தீப்.

இரு­வ­ரும் மாறி மாறி தாக்­கிக்­கொண்ட நிலை­யில், அருகில் இருந்த கோட­ரியை எடுத்து இளங்­கோ­வன் வெட்­டி­ய­தில் பிர­தீப்­ மர­ண­ம­டைந்­தார்.

"தமி­ழக அரசு மதுக்­க­டை­களை மூடவேண்­டும். அதி­லும் கொரோனா ஊர­டங்கு காலத்­தில் வரு­மா­னம் இல்­லா­மல் இருக்­கும் பல குடும்­பங்­க­ளின் நிம்­ம­தியை மது அழிக்­கிறது. பல்­வேறு குற்­றங்­கள் நடை­பெற மதுவே கார­ண­மாக உள்­ளது," என்று நாட்டை காப்­போம் அமைப்­பின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சி.ஜே.ராஜன் கூறியுள்ளார்.

-

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!