சென்னை: கொரோனா பெருந்தொற்று கணிசமாகக் குறைந்து, மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், டெங்கிக் காய்ச்சல் அதிகரித்து வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெரிசல் மிகுந்த சென்னை மாநகரில் கொசுக்கள் தொல்லை அதிகமாகக் காணப்படும் நிலையில் டெங்கி, மலேரியா, சிக்கன்குனியா, கொசுவினால் பரவக்கூடிய ஸிக்கா கிருமித்தொற்றிலிருந்தும் மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பே கொசுத் தொல்லையை ஒழிப்பதற்கு களமிறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
அடையாறு, கூவம், பக்கிங் ஹாம் என 140 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்வழிப்பாதைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொசு ஒழிப் பிற்காக 3,600 பணியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை இவர்கள் மேற்கொண்டு வருகின்ற னர்.
கடந்த ஐந்து மாதங்களில் இந்தியா முழுவதும் 6,837 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டனர். இவர்களில் தமிழகத்தில் தான் ஆக அதிகமாக 2,008 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

