அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம்

1 mins read
6f1a41ef-35ac-4e27-bc65-4f965a1f2c2d
-

சென்னை: மேக­தாது அணை விவ­கா­ரம் தொடர்­பில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நேற்று நடந்த அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் மூன்று முக்­கிய தீர்­மா­னங்­கள் நிறை வேற்­றப்­பட்­டன.

அதன்­படி, "கர்­நா­டக அர­சின் மேக­தாது அணை கட்­டும் முயற்­சி­க­ளுக்கு மத்­திய அரசு அனு­மதி அளிக்­கக் கூடாது.

"மேக­தாது அணை விவ காரத்­தில் மாநில அரசு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்கைகளுக்கு அனைத்­துக் கட்­சி­களும் ஆத­ரவு அளிக்கவேண்­டும்.

"அணை கட்­டு­வ­தற்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்ட தீர்மா னங்­களை அனைத்­துக் கட்சி களும் பிர­த­ம­ரி­டம் வலி­யு­றுத்த வேண்­டும்," என­வும் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

இது­கு­றித்து பாமக தலை­வர் ஜி.கே மணி (படம்), செய்­தி­யா­ளர் களி­டம் கூறு­கை­யில், "தமி­ழ­கத்­தின் உரி­மை­யைக் காப்­ப­தில் மாநிலத்தின் அனைத்­துக் கட்­சி­களுக்­கும் பங்கு உள்­ளது. அனைத்­துக் கட்­சிக் குழு­வி­ன­ரும் டெல்லி சென்று பிர­த­ம­ரை நேரில் சந்­திப்­போம் என முதல்­வர் தெரி­வித்­துள்­ளார். இது வர­வேற்­கத்­தக்­கது," என்றார்.