பொய் பல்லை விழுங்கிய பெண் பலி

பொய் பல்லை விழுங்கிய பெண் பலி

1 mins read
64cae125-4076-4cce-9bc3-99fa414ac591
-

சென்னை: சென்­னை­யைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் தண்ணீர் குடிக்கும்போது, தனக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கைப் பல்லை விழுங்கியதால் உயி­ரி­ழந்தார்.

சென்னை வள­ச­ர­வாக்­கத்தை அடுத்த ராமா­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த சுரேஷ், 48, என்­ப­வ­ரின் மனைவி ராஜ­லட்­சுமி, 43. இவர் கடந்த வாரம் பல் மருத்­து­வ­ம­னை­யில் புதி­தாக மூன்று செயற்­கை பற்களைக் கட்­டிக்­கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், நேற்று அவர் தண்­ணீர் குடிக்­கும்போது மூன்று பற்களில் ஒரு பல் கழண்டு வயிற்­றுக்­குள் சென்­றுள்­ளது.

இத­னால் அவ­ருக்கு வாந்தி, மயக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. அவரை மருத்­து­வ­ம­னைக்கு குடும்­பத்­தி­னர் அழைத்துச் சென்­ற நிலையில், அவர் இறந்துவிட்­ட­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.