பள்ளிகளைத் திறக்கும்படி ஏழு சங்கங்கள் அரசிடம் மனு

1 mins read
3001f82e-a59c-4409-929c-d5a8bee8e071
-

சென்னை: தமி­ழ­கத்­தில் விரை­வில் பள்­ளி­க­ளைத் திறந்து, மாண­வர்­க­ளுக்கு நேரடி வகுப்­பு­களை நடத்த அரசு நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டும் என தனி­யார் பள்­ளி­களின் ஏழு சங்­கங்­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் கோரியுள்ள­னர்.

இவர்கள் பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்யா­மொ­ழி­யைச் சந்­தித்து மனு அளித்­த­னர். அதில், "கல்­விக் கட்­ட­ணத்தை பள்­ளி­க­ளின் செல­வுக்கு ஏற்ப முறைப்­ப­டுத்த வேண்­டும், மாண­வர்­கள் இணை­யம் வழி­ பாடம் படிப்­பது ஒரு நிறைவைத் தராது என்­ப­தால் நேர­டி­யாக வகுப்­ப­றை­களில் பாடம் நடத்­து­வ­தற்கு ஏற்பாடு செய்­ய­வேண்­டும்.

"10 ஆண்­டு­க­ளாக செயல்­படும் பள்­ளி­க­ளுக்கு நிரந்­தர அங்­கீ­கா­ரம் வழங்­க­வேண்­டும். பாடத் திட்­டம், பாடப் புத்­தக தயா­ரிப்­புக்­கான வல்­லு­நர் குழுக்­களில் தனி­யார் பள்ளி சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் இடம் அளிக்­க­வேண்­டும்," என கேட்­டுக்கொண்­டு உள்­ள­னர்.