சென்னை: தமிழகத்தில் விரைவில் பள்ளிகளைத் திறந்து, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தனியார் பள்ளிகளின் ஏழு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கோரியுள்ளனர்.
இவர்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து மனு அளித்தனர். அதில், "கல்விக் கட்டணத்தை பள்ளிகளின் செலவுக்கு ஏற்ப முறைப்படுத்த வேண்டும், மாணவர்கள் இணையம் வழி பாடம் படிப்பது ஒரு நிறைவைத் தராது என்பதால் நேரடியாக வகுப்பறைகளில் பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
"10 ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவேண்டும். பாடத் திட்டம், பாடப் புத்தக தயாரிப்புக்கான வல்லுநர் குழுக்களில் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினருக்கும் இடம் அளிக்கவேண்டும்," என கேட்டுக்கொண்டு உள்ளனர்.

