செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
789bbe8f-c888-40aa-9bc0-e58d104266e0
-

அமைச்சர்: நீட் தேர்வுக்கு

மாணவர்கள் தயாராவதில் தவறில்லை

சைதாப்பேட்டை: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை ைசதாப்பேட்டை யில் செய்தியாளர்களிடம் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியபோது, "நீட் தேர்வு நடத்தவேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கையாக உள்ளது. இருப்பினும், நீட் தேர்வுக்கு முறையாக விலக்கு பெறும் வரை தமிழக அரசு, மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதைத் தொடரும். நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் தவறில்லை. படிப்பது நல்லதுதான்," என்றார்.

லியோனி பதவிேயற்பு

சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பதவியேற்றுள்ள லியோனி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும் என்பதே முதல்வரின் மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வையாக உள்ளது. அதற்கு உதவும் வகையில் செயல்படுவேன்," என்று கூறினார்.

பசுவுக்கு கிராமமக்கள் வளைகாப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மூங்கிதாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 48. இவர் வளர்த்து வரும் ஐஸ்வர்யா என்ற பசு மாடு, இப்போது ஒன்பது மாத சினையாக உள்ளதால் அதைக் கொண்டாடும் வகையில், அதற்கு வளைகாப்பு நடத்த அண்ணாமலை குடும்பத்தினர் முடிவு செய்தனர். உறவினர்கள், நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். நேற்று முன்தினம் கோவிலில் வைத்து பசுவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பட்டுத் துண்டு கட்டி, சுமங்கலிப் பெண்கள் வளையல்களை அதன் கொம்பில் மாட்டிவிட்டு வளைகாப்பு நடத்தினர். படம்: ஊடகம்

'தொலைக்காட்சி விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது'

சென்னை: இனி தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினர் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், "கழகத் தலைவர்களின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தலைப்புகளை வைத்து விவாதங்களை நடத்துகிறார்கள். எங்களுக்கு இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதனால் அதிமுக இனி ஊடக விவாதங்களில் ஈடுபடாது," என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு

திருப்பூர்: தமிழக மக்களுக்குத் தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் விதமாக அனைத்துப் பணிகளையும் அரசு தொடங்கி உள்ளதாக திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.