கிருமி பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்தது

கிருமி பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்தது

1 mins read
36f1712f-9c90-47ee-bcfd-223a6fa3db69
-

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது உறுதியானது. அத்துடன், 48 பேர் உயி­ரி­ழந்­தனர்.

மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு தற்­போது வெகு­வாக தணிந்­து வரு கிறது.

இந்­நி­லை­யில், இன்­றைய பாதிப்பு நில­வ­ரம் குறித்து சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "தமிழ்­நாட்­டில் கடந்த 24 மணி நேரத்தில் 139,113 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டதில் 2,505 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

"3,058 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். கொரோனா பாதிப்பால் 48 பேர் உயி­ரி­ழந்த நிலையில், மொத்த உயி­ரி­ழப்பு 33,502 ஆக அதி­க­ரித்­துள்­ளது. சென்­னை­யில் 160 பேருக்­கும் செங்­கல்­பட்­டில் 135 பேருக்­கும் கோயம்­புத்­தூ­ரில் 282 பேருக்­கும் ஈரோட்­டில் 187 பேருக்­கும் இப்பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போது 31,218 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை­ பெற்று ­வ­ரு­கின்­ற­னர்," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே, மக்­கள் தொகைக்கு ஏற்ப கொரோனா தடுப்­பூசி ஒதுக்­கா­த­தால் தட்­டுப்­பாடு நில­வு­வ­தா­க­வும் தமி­ழ­கத்­துக்கு சிறப்பு ஒதுக்­கீ­டாக ஒரு கோடி தடுப்­பூசியை வழங்கவேண்­டும் என்­றும் பிர­த­மர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடி­தம் எழுதி உள்­ளார்.