நடிகர் வடிவேலு: நன்றாக இருக்கும் தமிழகத்தை பிரிக்கத் ேதவையில்லை

நடிகர் வடிவேலு: நன்றாக இருக்கும் தமிழகத்தை பிரிக்கத் ேதவையில்லை

2 mins read
1b99a1f1-eb4e-4f79-a16a-c2f3caed1998
முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்த நடிகர் வடிவேலு, பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். படம்: ஊடகம் -

சென்னை: அரசு நிறை­வேற்­றும் ஒவ்­வொரு திட்­டங்­க­ளை­யும் பார்க்­கும்­போது இது மக்­க­ளுக்­கான பொற்­கால ஆட்­சி­யாக இருக்­கும் என்­பது தெளி­வா­கிறது என நடி­கர் வடி­வேலு தெரி­வித்­துள்­ளார்.

தன் உடல் மொழி­யா­லும் நகைச் சுவை உணர்­வா­லும் அனை­வ­ரை­யும் கவர்ந்­த­வ­ரான நடி­கர் வடி­வேலு, சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லினை நேற்று நேரில் சந்­தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்­சத்­திற்­கான காசோ­லையை வழங்­கி­னார்.

இதைத்­தொ­டர்ந்து செய்­தி­யா­ளர் களைச் சந்­தித்த வடி­வேலு, அவர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு தனது பாணி­யி­லேயே பதில் அளித்­தார்.

"அதி­க­மான படங்­களில் இனி என்­னைப் பார்க்­க­லாமா எனக் கேட்­கி­றீர்­கள். திரைப்­ப­டங்­க­ளி­லும் ஓடி­டி­யி­லும் நான் நடிப்­ப­தற்­கான பேச்சு­வார்த்­தை­கள் நடந்துகொண்டிருக்­கின்­றன. கண்­டிப்­பாக, நல்­லதே நடக்­கும்," என்றார்.

முதல்­வ­ரின் செயல்­பா­டு­கள் எப்­படி இருக்­கிறது என்ற கேள்­விக்கு, "முதல்­வரை மரி­யாதை நிமித்­த­மா­கச் சந்­தித்­தேன். மிக­வும் எளிமை யாக, நம் குடும்­பத்­தில் உள்ள ஒரு­வர் போல் என்­னி­டம் அவர் பேசி­யது மகிழ்ச்­சி­யாக இருந்­தது. முதல்­வர் நிவா­ரண நிதிக்கு ரூ. 5 லட்­சம் நன்­கொடை கொடுத்­தேன்.

"முதல்வரின் ஆட்சி பொற்கால மான ஆட்சி. பெண்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளனர். குடும்­பத் தலை­விக்கு மாதம் ரூ.1,000, பெண்­க­ளுக்­கான கட்­ட­ண­மில்லா பேருந்து திட்­டம் சிறப்­பு.

"மக்களைத் தன்வசப்படுத்தி, அவர்களைத் தடுப்பூசி போட வைத்துள்ளார் ஸ்டாலின். அவர் எத்தனை ஊசி போடச் சொன்னா லும் நான் போடுவேன். 40 ஊசி போடச் சொன்னாலும் போடுவேன்.

"நான் இரண்டு முறை தடுப்­பூசி போட்­டு­விட்ே­டன். மக்­கள் அனை­ வ­ரும் முன்­வந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும். குடும்­பத்­தைக் காப்­பாற்ற ஊசியைத் தவிர வேறு வழி­யில்லை.

இதை­ய­டுத்து கொங்கு நாடு குறித்த கேள்­விக்கு, "தமிழ கத்தில் ஏற்கெனவே ராம்நாடு, ஒரத்த நாடு என பல உள்ளன. இதில் கொங்கு நாடு, அந்த நாடு, இந்த நாடு என்பது ஏன்? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை பிரிக்கத் தேவையில்லை," என தனது பாணி­யில் கிண்­டல் அடித்து­விட்டுச் சென்­றார்.

ராம்­நாடு, ஒரத்­த­நாடு என பல நாடு­கள் உள்ளன. இவ்­வ­ளவு நாட்­டை­யும் பிரிக்கமுடி­யுமா? இவற்றைப் பிரித்­தால் அவ்­வ­ளவுதான்.

நன்­றாக இருக்­கும் தமிழ்­நாட்டை எதற்­குப் பிரிக்க வேண்­டும்? இவற்றை­ எல்­லாம்­ கேட்­கும்­போதே தலை­சுற்றுகிறது.

நகைச்சுவை நடி­கர் வடி­வேலு