சென்னை: மேற்கு வங்க மாநிலத் தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வங்கதேசக் குடியேறிகள் தமிழ கத்தில் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பது போலிசாரின் கவனத்துக்குத் தெரியவந்துள்ளது.
ஆதார் அட்டைகளுடன் தமிழ கத்தில் அடைக்கலம் புகுந்துள்ள அவர்களைப் பிடிக்க போலிசார் வலைவிரித்துள்ளதாகவும் தகவல் கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் உள்நாட்டுப் பாது காப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை அடுத்து, இந்த சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறியும் பணியில் போலிசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
அண்மையில் மேற்கு வங்கத்தினர் எனக் கூறிக்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்ளாதேஷ் குடியேறிகள் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.
இவர்கள் சில இடைத்தரகர்களின் உதவியுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ளனர் என்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு வங்கத்தில் இருந்து வேலைக்காக வந்துள்ள தாகக் கூறி பங்ளாதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு மாநிலம் எங்கும் நடப்புக்கு வந்தபோது, வடமாநிலத்தவர்களில் பெரும்பாலானோர் வேலையின்றி தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரவரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்ற நிலையில், இந்த பங்ளாதேஷ் குடியேறிகள் மட்டும் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லவில்லை.
கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் இவர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் ஓர் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க இவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிடி லும் ஆதார் அட்டை வைத்துள்ள னர். போலி ஆவணங்களைக் கொடுத்து இந்த அட்டைகளைப் பெற்றனரா என்பது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த ஆதார் அட்டையை வைத்து இதர அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் இவர்கள் முகவரி சான்று அளித்துள்ளனர். இந்த சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

