விடுமுறையில் ஆடு மேய்த்து, விமானம் தயாரித்த மாணவர்

விடுமுறையில் ஆடு மேய்த்து, விமானம் தயாரித்த மாணவர்

2 mins read
1337fd56-84c4-44b7-99dd-36c1523f536a
தான் தயாரித்த சிறு ரக விமானத்துடன் முத்துக்குமார். படம்: ஊடகம் -

திருச்­சுழி: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க தமி­ழ­கத்­தில் கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக பள்­ளி­கள் திறக்­கப்­ப­டா­மல் மூடப் பட்டு உள்­ளன.

இந்­நி­லை­யில், இந்த கொரோனா கால விடு­மு­றையை வீணாக்­கா­மல் பேட்­ட­ரி­யில் இயங்­கும் விமா­னத்­தைத் தயா­ரித்து இளம் விஞ்­ஞா­னி­யாக சாதனை படைக்­கும் முயற்­சி­யில் இறங்கி உள்­ளார் அம்­மன்­பட்­டி­யைச் சேர்ந்த முத்­துக்­கு­மார்.

விரு­து­ந­கர் மாவட்­டம், திருச்­சுழி அருகே உள்ள அம்­மன்­பட்­டி­ கிராமத் தைச் சேர்ந்த முத்­துக்­கு­மார், 17, பிளஸ் 2 படிக்­கும் மாண­வர்.

சிறு வய­தி­லேயே தந்­தையை இழந்த இவர், கூலி வேலை செய்து சம்­பா­திக்­கும் தனது தாய் செல்­வி­யின் வரு­மா­னத்­தில் கல்வி கற்று வரு­கி­றார்.

முத்­துக்­கு­மா­ருக்கு சிறு வயது முதலே அறி­வி­யல் கண்டுபிடிப்பு களில் அதிக ஆர்­வம் இருந்து வந்­தது. ஒருபக்­கம் வறுமை வாட்­டி­னா­லும் மறுபக்­கம் எதி­லா­வது சாதிக்­க­வேண்­டும் என்ற வேட்கை அவரைத் தூங்­க­வி­டா­மல் துரத்­தி­யது.

இந்­நி­லை­யில், இப்­போது அவர், பேட்­ட­ரி­யில் இயங்­கும் விமா­னத்தை தயா­ரித்து, அதனை இயக்­கும் சோதனை முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார். இவ­ருக்கு கிராம மக்­கள் உள்­ளிட்­டோர் பாராட்டுகளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இது­கு­றித்து முத்­துக்­கு­மார் கூறு­கை­யில், ''தின­மும் இணைய வகுப்­பு­கள் முடிந்­த­தும் வீட்­டில் உள்ள ஆடு­களை மேய்த்­து­விட்டு, எஞ்சிய நேரத்­தில் கடந்த 10 மாதங்­க­ளுக்­கும் மேலாக வீட்­டில் உள்ள பழைய பொருட்­க­ளைக் கொண்டு 6 அடி நீளம், 6 அடி அக­லம் கொண்ட சிறிய விமா­னத்தை வடி­வ­மைத்­தேன். இந்த விமா­னத்தை இயக்­கக் கூடிய ஒரு சில பாகங்­களை இணை­யம் வழி 'ஆர்­டர்' செய்­துள்­ளேன். விரை­வில் அவை வந்­த­வு­டன் விமா­னத்தை இயக்கு­வேன்,'' என்­றார்.