நாமக்கல்: தமிழக சிறுமி மித்ராவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் மருந்துக்கான வரியை ரத்து செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் பகுதியில் வசித்து வரும் சதீஷ்-பிரியதர்ஷினி தம்பதியரின் மகள் மித்ரா, 2. (படம்)
அண்மையில் மித்ராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவ மனையில் அனுமதித்தபோது குழந்தைக்கு தண்டுவட சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான தடுப்பு மருந்து சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதியளிக்க பெற் றோர் கோரிக்கை விடுத்தனர்.
பலர் தாராளமாக நிதி அளித்த தைத் தொடர்ந்து, குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. ஆனால், மருந்தை இந்தியாவிற்குள் கொண்டுவர ரூ.6 கோடி இறக்குமதி வரி உள்ளதால் மருந்தை வாங்குவதில் சிக்கல் இருந்துவந்தது.
இதுகுறித்து பலரும் மத்திய அரசுக்கு வரிச் சலுகை வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதியிருந்தார்.

