கன்னியாகுமரி: பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக மத போதகர் உட்பட ஏழு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரை விளையை அடுத்துள்ள எஸ்.டி.மாங்காட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் லால் ஷைன்சிங், 40. இவர் தனது வீட்டில் வைத்து பிரார்த்தனைக் கூடம் நடத்தி வந்துள்ளார். இந்தப் பிரார்த்தனைக் கூடத்துக்கு கேரள மாநிலம், கன்னியா குமரி மாவட்டத்தில் இருந்து சொகுசு கார்களில் இளம் பெண்களும் ஆண்களும் என அடிக்கடி பலர் வந்து சென்றனர்.
இதனையடுத்து பிரார்த்தனைக் கூடத்தை ரகசியமாக கண்காணித்த போலிசார் பாலியல் தொழில் நடப்பதை உறுதிப்படுத்தினர்.

