ெதன்காசி: பாம்புகளைப் பாது காப்பதற்கு என்றே ஆண்டு தோறும் இன்றைய தினத்தில் (ஜூலை 16) உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்ட கிராமங் களில் உள்ள வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால், கடையநல்லூரைச் சேர்ந்த ரா.ஷேக் உசேன், 26, என்ற இளையரைத் தான் அழைக்கின்றனர். அவர், லாவகமாகப் பாம்பைப் பிடித்து காட்டில் விட்டுவிடுகிறார்.
விலங்கியல் பட்டப் படிப்பு படித்துள்ள ஷேக் உசேன், இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை உயிருடன் மீட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பாம்புகள் மனிதனுக்கு தீங்கு செய்வதில்லை. நன்மையே செய்கின் றன. ஒரு பாம்பு ஆண்டுக்கு 3,000 எலிகளைப் பிடித்து உண்ணும். விவசாயிகளின் நண்பன் பாம்புகள். பாம்புகள் அனைத்தும் விஷ முள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பாலான பாம்பு கள் விஷமற்றவையே," என்கிறார்.