அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லி பயணம் மேகதாது அைண விவகாரம்: மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் சந்திப்பு

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லி பயணம் மேகதாது அைண விவகாரம்: மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் சந்திப்பு

2 mins read
69e7ef90-c668-4c03-9449-15d716885720
-

புதுடெல்லி: மேக­தாது அணை விவ­கா­ரம் தொடர்­பாக தங்­க­ளது கருத்­து­களை எடுத்­து­ரைக்க நீர்­வ­ளத் துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் தலை­மை­யில், தமி­ழ­கத்­தைச் சேர்ந்த அனைத்­துக் கட்­சிக் குழு வினர் நேற்று தலை­ந­கர் டெல்­லிக்கு புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

திமுக, அதி­முக, பாமக, பாஜக, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட 13 கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் மத்­திய நீர்­வ­ளத் துறை அமைச்­சர் கஜேந்­திர சிங் ஷெகா­வத்தை இன்று மதி­யம் 1.30 மணி­ய­ள­வில் சந்­தித்­துப் பேச உள்­ள­னர்.

அப்­போது, காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது என்­னு­மி­டத்­தில் புதிய அணை கட்­டு­வ­தற்கு கர்­நா­டக அர­சுக்கு அனு­மதி வழங்­கக் கூடாது என கஜேந்­திர சிங்­கி­டம் வலி­யு­றுத்த உள்­ள­னர்.

அண்­மை­யில், டெல்­லி­யில் பிர­த­மர் நரேந்­திர மோடியை நேரில் சந்­தித்­துப் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், அணை பிரச்­சினை குறித்து விளக்­கி­ய­து­டன், தமி­ழக விவ­சா­யி­க­ளின் நல­னைக் காக்­க­வேண்­டும் என்­றும் வலி­யுறுத்தி இருந்­தார்.

அத்­து­டன், இவ்விவ­கா­ரம் குறித்து அனைத்து அர­சி­யல் கட்­சி­யி­ன­ரு­ட­னும் மாநில அரசு கடந்த 12ஆம் தேதி ஆலோ­சனை நடத்தியது.

அப்­போது, உச்­ச­நீ­தி­மன்­றத் தீர்ப்­புக்கு எதி­ராக மேக­தா­து­வில் அணை கட்­டும் கர்­நா­டக அர­சின் திட்­டத்­துக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கக்­கூ­டாது என வலி யுறுத்­து­வது உள்­ளிட்ட மூன்று தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

தமி­ழக மக்­க­ளின் எதிர்ப்பை பிர­தி­ப­லிக்­கும் வித­மாக இந்த தீர்­மா­னங்­களை மத்­திய அமைச்­ச­ரி­டம் அனைத்து கட்­சிப் பிர­தி­நி­தி­களும் நேரில் வழங்­கவும் முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி, இன்று கஜேந்­திர சிங்கை நேரில் சந்­தித்து அணை விவ­கா­ரம் குறித்து பேச உள்­ள­னர்.

இதற்­கி­டையே, இந்த விவ­கா­ரம் குறித்து புதுச்­சே­ரி­யில் முதல்­வர் ரங்­க­சாமி தலை­மை­யில் ஆலோ­சனை நடத்­தப்­பட்­டது.

ஒரு­வேளை மேக­தா­து­வில் அணை கட்­டப்­பட்­டால் புதுச்­சேரிக்கு காவிரி நீர் கிடைக்­கா­மல் அல்­லல் படும் சூழல் ஏற்­படும் என்று பொதுப் ­ப­ணித்­துறை அமைச்­சர் லட்­சு­மி­நாரா­ய­ணன் சுட்­டிக்­காட்டினார்.

இதை­ய­டுத்து, கர்­நா­ட­கா­வின் முயற்­சிக்கு மத்­திய அரசு ஒருக்­கா­லும் அனு­ம­திக்­கக் கூடாது என புதுவை அரசு வலி­யு­றுத்தியுள்­ளது.

விவ­சா­யி­கள் வாழ்­வா­தா­ரத்­தைக் கருத்­தில்­கொண்டு அணை கட்­டும் திட்­டத்­தைக் கைவி­டு­மாறு பிர­த­மர் மோடி, உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, நீர்­வ­ளத் துறை அமைச்­சர் கஜேந்­திர சிங் ஷெகா­வத் ஆகி­யோ­ருக்கு புதுவை முதல்­வர் ரங்­க­சாமி கடி­தம் எழு­தி­யுள்­ளார் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில், இந்த அணை கட்டும் விவகாரத்தில் எந்த மாநி­ல­மும் பாதிக்­கப்­ப­டாத வகை­யி­லான தீர்வை எடுக்க மத்­திய அரசு ஆலோ­சித்து வரு­கிறது.

எனவே காவி­ரி­யோடு தொடர்­பு­டைய தமி­ழ­கம், கர்­நா­ட­கம், புதுச்­சேரி, கேரளா ஆகிய நான்கு மாநில முதல்­வர்­க­ளு­ட­னும் விரி­வாக ஆலோ­சனை நடத்தி தீர்வு காண அமைச்­சர் கஜேந்­திர சிங் ஷெகா­வத் முடிவு செய்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக சம்­பந்­தப்­பட்ட நான்கு மாநில முதல்­வர்­க­ளுக்­கும் விரை­வில் கடி­தம் அனுப்­பப்­பட உள்­ள­தா­கத் தெரி­கிறது.