அண்ணாமலையை பட்டாசு வெடித்து வரவேற்க தடை; பாஜகவினர்-போலிசார் தள்ளுமுள்ளு

அண்ணாமலையை பட்டாசு வெடித்து வரவேற்க தடை; பாஜகவினர்-போலிசார் தள்ளுமுள்ளு

1 mins read
d34ba9de-3fde-4ee1-b6ba-d51d4f984fcc
திருச்சி அண்ணா சிலை அருகே அண்ணாமலைக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

திருச்சி: தமி­ழக பாஜக தலை­வ­ராக இருந்த எல்.முரு­கன், மத்­திய இணை அமைச்­ச­ராக பத­வி­யேற்­றுள்ள நிலை­யில், தமி­ழக பாஜ­க­வின் துணைத் தலை­வ­ராக இருந்த முன்­னாள் ஐஏ­எஸ் அதி­காரி அண்­ணா­மலை தமிழ்­நாடு பாஜக தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். இன்று அவர் தமிழக பாஜக தலை­வ­ராகப் பத­வி­யேற்க உள்­ளார்.

கரூ­ரில் இருந்து சென்­னைக்கு சாலை மார்க்­க­மாக வரும் அண்­ணா­மலை, திருச்­சிக்கு நேற்று காலை வந்­த­டைந்­தார்.

அவ­ருக்கு மேல சிந்­தா­மணி பகு­தி­யில் பாஜ­க­வி­னர் உற்­சாக வர­வேற்பு அளிப்­ப­தற்­கா­கக் காத்­தி­ருந்­த­னர்.

அப்­போது, பாஜ­க­வி­னர் அவ­ரு­டைய வரு­கைக்­காக பட்­டாசு வெடிக்க தயா­ரா­கிக் கொண்­டி­ருந்த நிலை­யில், போலி­சார் வெடி வைப்­ப­தற்கு மறுப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னால் இரு­த­ரப்­புக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்டு, நீண்ட நேரம் பாஜ­க­வி­னர் போலி­சா­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். இப்­பி­ரச்­சினை நடந்­து­கொண்­டி­ருக்­கும் நேரத்­தில் அண்­ணா­ம­லை­யின் வாக­னம் அங்கு வந்து நின்­றது. அப்­போது பாஜ­க­வி­னர் வெடி­களை வெடிக்­கச் செய்­த­னர். காவல்­து­றை­யி­ன­ரும் ஒதுங்கி நின்­ற­னர்.