புதுச்சேரி: புதுச்சேரியில் திடீரென கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ஒரு வயதுக்கு உட்பட்ட 13 குழந்தைகள் உள்பட 19 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கிருமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, புதுச்சேரி யில் இன்றுமுதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த முடிவை ஒத்திவைப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமி பரவும் அபாயம் இருப்பதால் கல்வி யாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

