மூன்றாவது அலையை எதிர்கொள்ள பயிற்சி

மூன்றாவது அலையை எதிர்கொள்ள பயிற்சி

1 mins read
a5460295-dcc3-4074-82a3-5bc172557885
-

சென்னை: அவ­சர காலத்­தில் உயிர் காக்­கும் மருத்­து­வச் சாத­னங்­களை எப்­படி கையாள வேண்­டும் என்­பது குறித்து மருத்­து­வர்­கள், தாதி­யர், மருத்­து­வப் பணி­யா­ளர்­க­ளுக்கு கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா சிறப்பு மருத்­து­வ­ம­னை­யில் பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இதன்­வழி, மூன்­றாம் அலை தொற்றை சமா­ளிக்க அம்­ம­ருத்­துவ மனை தயா­ராகி வரு­கிறது.

இது­கு­றித்து இம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் இயக்­கு­நர் நாரா­ய­ண­சாமி கூறு­கை­யில், "இந்த மருத்­து­வ­ம­னை­யில் இந்த ஆண்­டில் இது­வரை 20,289 பேருக்கு சிகிச்சை அளித்­துள்­ளோம். அவர்­களில் 18,932 பேர், அதா­வது 97% மக்­கள் குண­மடைந்து வீடு திரும்பியுள்­ள­னர்.

மூன்­றாம் அலை­யால் குழந்தை கள் பாதிக்­கப்­ப­ட­லாம் என எச்­ச­ரிக்­கப்பட்­டுள்­ள­தால் அவற்றை சமா­ளிக்க, குழந்­தை­களுக்கான 100 சிகிச்சை பிரிவுகள் அமைக்­கப் பட்­டுள்­ளன. எனவே, குழந்தை களுக்கு சிகிச்சை அளிப்­பது குறித்தும் நவீன தொழில்­நுட்­பங்­கள் குறித்தும் மருத்துவர்கள், தாதி யருக்கு பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது," என்று தெரிவித்தார்.