மேல்முறையீடு செய்ய நடிகர் விஜய் முடிவு

2 mins read
4fd6f71d-7ae0-4cb9-a71a-09527b24ef1d
-

விஜய் வரிவிலக்கு உரிமைதான் கோரினார். அதில், வரி ஏய்ப்பு என்ற வாதத்துக்கு இடமில்லை. நீதிபதியின் தீர்ப்பில் சில முரண்பாடான கருத்துகள் உள்ளன. அதனால், மேல்முறையீடு செய்யவுள்ளோம்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த விஜய்யின் வழக்கறிஞர் குமரேசன்

சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழக்கு தொடர்பில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்­ர­ம­ணி­யம் வழங்கிய தீர்ப்பில் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ள தாக விஜய்யின் வழக்கறிஞர் எஸ்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

"இந்த மேல்முறையீடு கூட வரி கட்டக்கூடாது என்பதற்காகவோ அபராதம் செலுத்தக்கூடாது என்பதற்காகவோ அல்ல.

"ஆட்சேபணைக்குரிய கருத்து களை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறோம். இவ்வளவு காரசாரமாக தமது கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்பதுதான் எங்களது வாதம்," என்றார் குமரேசன்.

வழக்கு தொடுப்பது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை. நுழைவு வரிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள பல பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

அப்படி இருக்கும்போது தனக்கு மட்டும் அபராதம் ஏன் என்றும் அவரது தனிப்பட்ட அரசியல், சமூக நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகவும் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

நுழைவு வரிக்கு எதிராக வழக்கு தொடுத்ததற்காகவே ஒரு லட்சம் அபராதம் விதித்தது தவறு என்று கூறி விஜய்யின் சட்டக் குழுவினர் மேல்முறையீட்டு மனுவைத் தயார் செய்து வருகின்றனர். வரும் திங்க ளன்று இம்மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நடி­கர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்­கி­லாந்­தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை இறக்­கு­மதி செய்­துள்­ளார். காருக்கு நுழைவு வரி விதிப்­ப­தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய அவ ருக்கு ஒரு லட்­சம் ரூபாய் அப­ரா­ தம் விதித்தது உயர் நீதி­மன்­றம்.