ரூ.800 கோடி விடுவிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி

ரூ.800 கோடி விடுவிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி

1 mins read
1af84688-4984-4bac-9260-4763b64ba3ce
-

புது­டெல்லி: கொரோனா இரண்­டாம் அலை­யின்­போது ஏற்­பட்ட பாதிப்பை சரி செய்­ய­வும் மூன்­றாம் அலை­யின் தாக்­கத்­தில் இருந்து பாது­காப்­பாக இருப்­ப­தற்­குத் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கைகளை மேற்­கொள்­ள­வும் முதல்­கட்டமாக ரூ.800 கோடியை மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்சா் மன்­சுக் மாண்ட்­வியா விடு­விப்­ப­தாக உறுதி அளித்­துள்­ளார் என்று தமி­ழக மருத்­து வத்­துறை அமைச்சா் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து அவர் செய்தி யாளா்க­ளி­டம் கூறி­ய­போது, "மத்திய அமைச்சா் மன்­சுக் மாண்ட்­வியாவை புது­டெல்­லி­யில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­தில் சந்­தித்து பல்­வேறு கோரிக்­கை­களை அளித்­தேன். தமி­ழ­கத்­தில் ஆறு கோடி பேருக்கு தடுப்­பூசி போட­வேண்­டி­யுள்­ளது. இவா்க­ளுக்கு இரண்டு தவணை தடுப்­பூசி செலுத்த 12 கோடி தடுப்­பூசி தேவைப்­படும்.

"எனவே கூடு­த­லாக தமி­ழ­கத்­துக்கு தடுப்­பூசி தேவை என வலி­யு­றுத்­தினேன். தமி­ழ­கத்­தில் தடுப்­பூசி போடும் பணி மிகச் சிறப்­பா­கச் செயல்­படு­வ­தாகப் பாராட்டு தெரி­வித்த மத்திய அமைச்சர் தமி­ழ­கத்­தின் தேவையைப் பூா்த்தி செய்­வ­தாகவும் உறு­தி­யளித்தாா்.

"மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை திட்­டத்­திற்கு நிதி உதவி அளிக்­கும் ஜப்­பான் நிறு­வ­னத்­து­டன் பேசி­ வ­ரு­வ­தா­க­வும் விரை­வில் பணி­கள் தொடங்­கும்," என்­றும் அவர் தெரி வித்ததாகவும் கூறினார்.