சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களில் 12 வயதுக்குட் பட்ட 110 குழந்தைகள் உள்ளதாகவும் மருத்துவம், மக்கள் நல் வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் அலை பரவும் அச்சம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், குழந்தைகள் 110 பேர் பாதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கிருமி பாதிப்பால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களை யும் சேர்த்து இதுவரை 33,606 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கிருமி பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,006 பேர் குணம் பெற்று வீடு திரும்பினர். சிகிச்சையில் 29,950 பேர் உள்ளனர்.

