முன்னாள் சபாநாயகர்: என்றென்றும் அதிமுக விசுவாசிதான்

அவி­நாசி: தான் திமு­க­வில் இணை­வ­தா­கப் பர­வும் தக­வல் தவ­றா­னது என்­றும் தான் என்றென்­றும் அதி­மு­க­வின் விசு­வா­சி­தான் என்­றும் முன்­னாள் சபா­நா­ய­கர் தன­பால் கூறி­யுள்­ளார்.

கொங்கு மண்­ட­லத்­தில் தனது கொடியை நாட்­ட­வேண்­டும் என திமுக வலு­வாக காய் நகர்த்தி வரு­கிறது. அதற்­கான முயற்சியிலும் இறங்கி உள்ளது.

ஏற்­கெ­னவே அம­முக பழனி யப்­பன், அதி­முக தோப்பு வெங்­கடா ­ச­லம், மநீம மகேந்­தி­ரன் உள்ளிட் டோர் திமுகவுக்கு வந்து­விட்­டனர்.

இந்­தப் பட்­டி­ய­லில் முன்­னாள் சபா­நா­ய­க­ரும் அவி­நாசி சட்­ட­மன்­றத் தொகுதி எம்­எல்­ஏ­வு­மான தன­பா­லும் இணை­யப் போவ­தாக தக­வல் பர­வி­யது.

இந்­நி­லை­யில், இது­கு­றித்து அவர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

"நான் திமு­க­வில் இணைவ தாக தவ­றான தக­வல் பரவி வரு­வது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. அது உண்மையல்ல. 1972ல் அதி­மு­கவை எம்­ஜி­ஆர் துவங்­கியபோது என் மாண­வப் பரு­வத்­தில் இருந்தே அக்­கட்­சி­யில் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றேன்.

"என்து 45 ஆண்டு கால அர சியல் வர­லாறு குறித்து அறி­யாத வர்­கள் வதந்­தி­யைப் பரப்பி விட்­டுள்­ள­னர். என் வாழ்க்கை அமை­தி­யா­னது. எந்த சூழ்­நிலையிலும் எந்­த­வொரு மாற்­றத்­தை­யும் விரும்­பா­த­வன் நான். அதிமு­க­வில் ஏழு முறை எம்­எல்­ஏ­வாக இருந்­துள்­ளேன். அமைச்­சர், துணை சபா­நா­ய­கர், சபா­நா­ய­கர் என பல வாய்ப்­பு­களை அக்­கட்சி வழங்­கி­யது. ஜெய­ல­லிதாதான் எனக்கு அத்­தனை பத­வி­க­ளை­யும் வழங்­கி­னார். அதி­முக என்னை நன்­றாக வைத்­தி­ருக்­கிறது; பெரு­மைப்­ப­டுத்தி இருக்­கிறது. எனவே, கட்­சிக்கு விசு­வா­ச­மாக இருப்­பேன்," என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!