மூன்றாவது கிருமிப் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரம்

மூன்றாவது கிருமிப் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரம்

1 mins read
738d1fbf-8889-46c7-867f-a5b9d6f640f1
-

சென்னை: கொரோனா 3வது அலை ஏற்பட்டால் பெரும் பாதிப்பை முன்கூட்டியே சமாளிக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழகம் உள்பட 6 மாநில முதலமைச்சர் களுடன் காணொளி வாயிலாக பேசினார். அப்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அவர் பேசினார். கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அது பரவாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று விரிவாகக் கேட்டறிந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எவ்வளவு பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விவரங்களும் கேட்டறியப்பட்டன.

கொரோனா 3வது அலை வராமல் இருக்க காய்ச்சல் முகாம்களை அதிகரிப்பது, சுகாதாரப் பணியாளர்களை முடுக்கிவிடுவது போன்ற பணிகளை தீவிரப்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, மார்க்கெட், கடைவீதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று பரவாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக அதிகாரிகள் குழுக்களை அமைத்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தவும் இறையன்பு கேட்டுக்கொண்டார்.