சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் கொடுத்த வரவேற்பும் அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட பிரம்மாண்ட சுவரொட்டிகளும் திமுக-அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளை திகைக்க வைத்துள்ளதாக தினமலர் இணையச் செய்தி தெரிவித்துள்ளது. "சென்னை தி.நகரிலுள்ள பாஜக அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ள சாலையில் வாழை மரம், தோரணம் கட்டி மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக, அதிமுக பொதுக்குழு, செயற்குழு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போது ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அளித்தது போன்று பாஜகவினர், அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர்," என அச்செய்தி கூறியது.
திராவிடக் கட்சிகள் திகைப்பதாக தகவல்
1 mins read
-

