சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கையை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியிடத் தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். "அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 61,000 பேருக்குத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 1,61,297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது," என அவர் கூறியுள்ளார். "இது அரசியல் செய்யும் நேரம் இல்லை; மக்களை காக்கும் நேரம்," என்றும் சுப்பிர மணியன் கூறினார். முன்னதாக, தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை யில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் இது தொடர் பாக வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
வெள்ளை அறிக்கை வெளிவருமாம்
1 mins read
-

