3 லட்சம் தடுப்பூசி

3 லட்சம் தடுப்பூசி

1 mins read
0aae2abe-8528-42eb-a556-b83553d9ab3b
-

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள மத்திய மருந்து சேமிப்புக் கிடங்கிலிருந்து 3 லட்சம் முறை போடக்கூடிய கோவி ஷீல்டு தடுப்பூசிகளை தமிழ் நாட்டிற்கு மத்திய சுகாதாரத் துறை விடுவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் 25 சரக்குப் பெட்டிகளில் விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை வந்தன. இவற்றை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மாநில மருந்து சேமிப்புக் கிடங்கிற்கு அதிகாரிகள் கொண்டு சென் றனர். இந்தத் தடுப்பூசிகளை தேவைக்கேற்ப மாவட்டங் களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெறுகிறது.