கொடைக்கானல்: சுற்றுலாத்
தலங்கள் திறக்கப்படாதபோதும் வார விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். பொது இடங்களில் உலாவரும் சுற்றுலாப் பயணிகளில் பலர் முகக்கவசம் அணிவதில் ஆர்வம் காட்டாதது உள்ளூர் மக்களுக்கு கிருமிப்பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

