75 தொகுதிகளில் தோல்வி ஏன்; ஆராய்கிறது திமுக

1 mins read
4336bb98-5f83-4892-9ecd-23ddc0ea28c3
-

மதுரை: நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 75 தொகுதி களில் திமுக தோற்றதற்கான காரணத்தை அக்கட்சி ஆராய்ந்து வருகிறது. எதனால் தோல்வி ஏற்பட்டது என்பதை அறிய 5 தொகுதிகளுக்கு ஒருவர் என 75 தொகுதிகளிலும் 15 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் அவர்கள் விசாரித்து வருகின்றனர். திமுக தோல்விக்கு முக்கிய காரணம் அங்குள்ள நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்றும் மாவட்டச்செயலாளர்களும் வேட் பாளர்களும் சரியாக செலவு செய்யவில்லை என்றும் புகார் கள் கூறப்பட்டு வருவதால் உண்மை எது என்று விசாரித்து அறியுமாறு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.