மூன்றாவது கிருமிப் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரம்

மூன்றாவது கிருமிப் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரம்

1 mins read
68d7d09f-4a29-4c52-ad39-f27b16af0726
-

சென்னை: கொரோனா 3வது அலை ஏற்­பட்­டால் பெரும் பாதிப்பை முன்­கூட்­டியே சமா­ளிக்க மாநில அர­சு­கள் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று பிர­த­மர் மோடி தமி­ழ­கம் உள்­பட 6 மாநில முத­ல­மைச்­சர்­

க­ளு­டன் காணொளி வாயி­லாக பேசி­னார். அப்­போது தமி­ழ­கத்­தில் எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­கள் குறித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் விரி­வாக எடுத்­து­ரைத்­தார்.

இந்த நிலை­யில் தலைமைச் செய­லா­ளர் இறை­யன்பு நேற்று அனைத்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் விரி­வான ஆலோ­சனை நடத்­தி­னார்.

ஒவ்­வொரு மாவட்ட ஆட்­சி­ய­ரை­யும் தொடர்­பு­கொண்டு அவர் பேசி­னார். கொரோனா பர­வல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில் மீண்­டும் அது பர­வா­மல் தடுக்க என்­னென்ன முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று விரி­வா­கக் கேட்­ட­றிந்­தார். ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் இது­வரை எவ்­வ­ளவு பேருக்கு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. இன்­னும் எவ்­வ­ளவு பேருக்கு தடுப்­பூசி போடப்­பட வேண்­டும் என்ற விவ­ரங்­களும் கேட்­ட­றி­யப்­பட்­டன.

கொரோனா 3வது அலை வரா­மல் இருக்க காய்ச்­சல் முகாம்­களை அதி­க­ரிப்­பது, சுகா­தாரப் பணி­யா­ளர்­களை முடுக்கிவிடு­வது போன்ற பணி­களை தீவி­ரப்­ப­டுத்­தும் படி­யும் கேட்­டுக்­கொண்­டார்.

குறிப்­பாக, மார்க்­கெட், கடை­வீ­தி­கள் போன்ற மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் தொற்று பர­வா­மல் தடுக்க கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும். இதற்­காக அதி­கா­ரி­கள் குழுக்­களை அமைத்து அரசு அறி­வித்­துள்ள வழி­காட்டு நெறி­மு­றை­களை கண்­டிப்­பாகக் கடை­ப்பி­டிக்குமாறு வலி­யு­றுத்­த­வும் இறையன்பு கேட்டுக்­கொண்­டார்.