செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9ca1f22f-7171-498e-bc81-8f8332c2a26d
-

மகன் அமைச்சர்; பெற்றோர்

கூலித் தொழிலாளிகள்

நாமக்கல்: மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் எல். முருகனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனூர் என்னும் குக்கிராமம். இவரது மனைவி கலையரசி மருத்துவராக இருக்கிறார். இரு மகன்களுடன் இவர்கள் சென்னையில் வசிக்கும் அதேவேளை வருதம்மாள், லோக நாதன் என்னும் முருகனின் பெற்றோர் அவர் களின் கிராமத்தில் இன்னும் விவசாயக்கூலி களாக வேலைக்குச் செல்கிறார்கள். "மகன் அமைச்சர் என்பதால் என்னுடைய உழைக்கும் குணத்தை மாற்றமுடியாது," என்று

லோகநாதன் தெரிவித்துள்ளார்.

ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. பயணம்: இளையரின் கண்டுபிடிப்பு

விழுப்­பு­ரம்: விழுப்­பு­ரம் அருகே உள்ள பக்­க­மேடு கிரா­மத்தைச் சேர்ந்­த­வர் எஸ்.பாஸ்­க­ரன் (33). இயந்­தி­ரப் பொறி­யி­யல் டிப்­ளமோ படித்­துள்­ளார். வாழும் காலத்­தில் எதை­யா­வது சாதிக்க வேண்­டும் என்­ப­தில் மிகுந்த ஆர்­வம் கொண்ட அவர், பழைய இரும்­புச் சாமான்கள் கடைக்­குச் சென்று பழைய சைக்­கிள் ஒன்றை ரூ.2 ஆயி­ரத்­திற்கு வாங்கி வந்து அதில் மின் மோட்­டார், பேட்­டரி, கண்ட்­ரோ­லர் என ரூ.18 ஆயி­ரம் செல­வி­லான கரு­வி­களைப் பொருத்தி மின்­சா­ரத்­தில் இயங்­கும் சைக்­கிளை வடி­வ­மைத்­துள்­ளார். "இந்த மின்­சார சைக்­கி­ளில் உள்ள பேட்­ட­ரி­யை ஒரு­முறை சார்ஜ் செய்தால் 30 கி.மீ. வேகத்­தில் செல்ல முடி­யும். இந்த ஒரு யூனிட் மின்­சா­ரத்­தில் 50 கி.மீ. வரை செல்­ல­லாம். பேட்­ட­ரி­யில் சார்ஜ் தீர்ந்­து­விட்­டால் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை. சைக்­கி­ளின் பெடல்­களை மிதித்து தொடர்ந்து இயக்­க­லாம்," என்று பாஸ்­க­ரன் கூறு­கி­றார்.

பதாகை வைக்கும் திமுகவினர்

மீது நடவடிக்கை: தலைமை எச்சரிக்கை

சென்னை: பதாகை (பேனர்) வைக்­கும் கலா­சா­ரத்தைக் கைவி­டாத திமு­க­வி­னர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று திமுக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். "பெரும்­பா­லான திமு­க­வி­னர் பதா­கை­கள் வைக்­கும் பழக்­கத்தைக் கைவிட்­டா­லும் ஒரு சிலர் அதனை தொடர்ந்து செய்­கின்­ற­னர். அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதி­முக ஆட்­சி­யில் கடைப்­பி­டிக்­கப்­பட்ட 'பேனர்' கலாசா­ரத்­தால் மர­ணங்­களும் விபத்­து­களும் நிகழ்ந்­தன," என்று ஆர்.எஸ். பாரதி கூறி­யுள்­ளார்.

சென்னை மக்கள் முகக்கவசம் அணிவது 47 விழுக்காடாக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராக முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது. முகக்கவசம் அணிந்து கொள்வோர் விகிதம் குடிசைப் பகுதிகளில் 41 விழுக்காடாகவும் மற்ற பகுதிகளில் 47 விழுக்காடா கவும் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் குடிசைப் பகுதிகளில் 21 விழுக்காடாகவும் இதர பகுதிகளில்

27 விழுக்காடாகவும் இதன் விகிதம் இருந்தது. சென்னையில் உள்ள 64 தெருக்களில் சுமார் 4,500 பேரிடம் நான்கு கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் சுகாதார நிபுணர் பிரப்தீப் கோர் கூறினார்.