மத்திய அரசு உறுதி கூறியதாக முதல்வர் ஸ்டாலின் தகவல் மேகதாது அணைக்கு அனுமதி கிடைக்காது

புது­டெல்லி: மேக­தா­து­வில் புதிய அணையைக் கட்ட கர்­நா­டக அரசுக்கு அனு­மதி தரப்­போ­வ­தில்லை என்று மத்­திய அரசு தம்­மி­டம் உறுதி கூறி இருப்­ப­தாக தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் நேற்று புது­டெல்­லி­யில் தெரி­வித்­தார்.

முதல்­வர் ஸ்டா­லின் முதல்­முறை­யாக அதி­பர் ராம்­நாத் கோவிந்தை புதுடெல்லியில் நேற்று சந்­தித்து பேச்சு நடத்­தினார். பிறகு அவர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

மேக­தா­து­வில் கர்­நா­டக அரசு புதிய அணை கட்­டி­னால் தமி­ழகம் பெரி­தும் பாதிக்­கப்­படும் என்­பதை தொடர்ந்து தாங்­கள் வலி­யு­றுத்தி வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

தமிழக சட்­ட­மன்ற நூற்­றாண்டு விழா­விற்குத் தலைமை ஏற்க தான் விடுத்த அழைப்பை அதி­பர் ஏற்­றுக்­கொண்டு இருப்­ப­தாகக் கூறிய முதல்­வர், அந்த விழா­வுக்­கான தேதி ஓரிரு நாட்­களில் முடிவு செய்­யப்­படும் என்­றார்.

மது­ரை­யில் கரு­ணா­நிதி பெயரில் கட்­டப்­படும் நூல­கத்­திற்கு அடிக்­கல் நாட்ட அதி­பர் ஒப்­புக்­கொண்டு இருப்­ப­தா­க­வும் சட்­ட­மன்ற விழா­வையொட்டி பேர­வை­யில் முன்­னாள் முதல்­வ­ரும் திமுக தலை­வ­ரு­மான கரு­ணா­நி­தி­யின் உரு­வப்­படம் திறந்து வைக்­கப்­படும் என்­றும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்­லூ­ரி­களை இப்­போ­தைக்கு திறக்க இய­லாது என்று குறிப்­பிட்ட அவர், உரிய நேரத்­தில் இதன் தொடர்­பில் முடிவு எடுக்­கப்­படும் என்­றும் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!