சென்னை: திரைப்பட நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
அதற்குத் தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை வரி மேல் முறையீடுகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

