கொரோனா தொற்று குறைகிறது; ஆன்மீக தலங்களில் தடுப்பூசி

கொரோனா தொற்று குறைகிறது; ஆன்மீக தலங்களில் தடுப்பூசி

1 mins read
0ad2ed8b-23c9-4627-be63-b784619cc79b
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்­து­வ­ரு­கிறது. ஞாயிற்­றுக்­கி­ழமை 143,429 பேருக்குப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தில் 2,079 பேருக்­குத் தொற்று இருந்தது தெரிந்தது. 29 பேர் மாண்­ட­னர். 21 மாவட்­டங்­களில் உயிர்­ இ­ழப்பு இல்லை என்­றும் அரசு அறிக்கை தெரி­வித்­தது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 27,897 ஆக உள்­ளது.

இத­னி­டையே, தமி­ழ­கத்­தில் அடுத்­த­ கட்­ட­மாக ஆன்­மீக தலங்­கள் உள்ள பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­படும் என்று மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை சின்­ன­ம­லை­யில் உள்ள ஒரு தனி­யார் பள்­ளி­யில் தடுப்­பூசி சிறப்பு முகா­மைத் தொடங்­கி­ வைத்­துப் பேசிய அவர், திரு­வண்­ணா­மலை, ராமேஸ்­வ­ரம், நாகூர், வேளாங்­கண்ணி மற்­றும் சின்­ன­மலை ஆகிய பகு­தி­களில் ஜூலை மாத இறு­திக்­குள் தடுப்­பூசி போட மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டு உள்­ள­தா­கக் கூறி­னார்.