பாதி இடிக்கப்பட்ட கட்டடம் தானாக இடிந்து மூவர் பலி

ஈரோடு: ஈரோடு மாவட்­டம் அந்­தி­யூர் என்ற பேரூ­ரில் பாதி இடிக்­கப்­பட்டு நின்­றி­ருந்த ஒரு சுவர் தானாக இடிந்து விழுந்­த­தில் மூவர் பலி­யா­னார்­கள்.

அந்­தி­யூ­ரில் ஒரு தனி­யார் மின்­சா­தன விற்­ப­னைக் கடையை இடித்து புதி­தாக கட்­டும் பணி­கள் நடந்து வரு­கின்­றன. கடை பாதி அள­வில் இடிக்­கப்­பட்டு இருந்­தது.

அந்­தி­யூர் வார சந்­தைக்­குப் பொருட்­களை விற்க வந்த பர்­கூர் மலைப் பகு­தி­யைச் சேர்ந்த ஏழு விவ­சா­யி­கள் சுவரின் அருகே படுத்து தூங்­கி­னர். நள்­ளி­ர­வில் திடீ­ரென மீதி கட்­டடம் தானாக இடிந்து விவ­சா­யி­கள் மீது விழுந்­தது. இதில் 7 பேரும் இடி­பா­டு­களுக்­குள் சிக்கிக்கொண்­ட­னர்.

அவர்­களில் மூவர் அதே இடத்­தில் மாண்­ட­னர். மற்­ற­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ பட்­டுள்­ள­னர். ஒரே ஒரு­வர் காயம் இன்றி தப்­பி­ய­தாக அதி­கா­ரிகள் கூறி­னர். போலிஸ் விசா­ரணை நடந்து வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன. தகவல் தெரிந்ததும் எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!