அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக வாய்ப்பு

அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக வாய்ப்பு

1 mins read
89ca257e-0c1d-4add-9b41-f3bfbc45ed5b
அன்புமணி ராமதாஸ். கோப்புப்படம் -

சென்னை: தமிழ்நாட்­டின் முக்­கிய அர­சி­யல் கட்­சி­களில் ஒன்­றான பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் தலைவர் பொறுப்பை அன்­பு­மணி ராம­தாஸ் ஏற்க அதிக வாய்ப்பு உள்­ள­தாக அந்­தக் கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அன்புமணி ராமதாஸ் இப்போது பாமக இளையரணித் தலைவராக இருக்கிறார். அண்­மைய சட்­ட­மன்றத் தேர்­தலில் அதி­முக அணி­யில் இருந்த பாமக, 4% வாக்­கு­களு­டன் நான்கு இடங்­களில் வென்­றது. கட்­சி­யின் தலை­வரான ஜி.கே.மணி, சட்­ட­சபை பாமக தலை­வ­ரா­க­வும் தேர்ந்து எடுக்­கப்­பட்­ட­தால் அவர் இப்­போது இரண்டு பொறுப்­பு­களில் இருந்து வரு­கி­றார்.

மாநில நிர்­வா­கத்­தில் இளைஞர்­

கள் இல்­லா­த­தால், மேலி­டத்­தி­டம் தொடர்பு இல்­லா­மல் இடை­வெ­ளி­யும் தொய்­வும் ஏற்­பட்டுள்­ள­தாக கட்சித் தொண்­டர்­கள் கருது­வதாக ஓர் ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

மூத்த நிர்­வா­கி­களும் இளைய நிர்­வா­கி­களும் இணைந்து பணி­யாற்­றும் வகை­யில், நிர்­வா­கி­கள் மாற்­றம் இடம்­பெற வேண்­டும் என்ற கோரிக்கை அக்­கட்­சி­யில் எழுந்­துள்­ளது. அண்­மை­யில் கட்­சி­யின் 33வது ஆண்டு விழாவை ஒட்டி அன்­பு­மணி அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

"ஆட்­சி­யைப் பிடிக்க வேண்­டும் என்­பது பாமகவை உரு­வாக்­கிய மருத்­து­வர் ராம­தா­சின் கன­வா­கும். அதை நன­வாக்க, நான் உங்­களை வழி நடத்­து­வேன்," என்று அறிக்கை­யில் அன்­பு­மணி தெரி­வித்து இருந்­தார்.

இதை வைத்­துப் பார்க்­கை­யில் அன்­பு­மணி விரைவில் கட்சித் தலை­வ­ராக தேர்ந்து எடுக்­கப்­ப­டு­வார் என்று கட்­சி­யி­னர் கரு­து­வதாகவும் பாமக பொதுக்­குழு கூடும்­போது, கட்­சி­யில் அதி­ரடி மாற்­றங்­கள் நடக்­கும் என்றும் கட்­சித் தரப்­பி­னர் தெரி­விப்­ப­தாக அந்த ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.