ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள்: அசத்தல் சீர்வரிசை

ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள்: அசத்தல் சீர்வரிசை

1 mins read
31e1bf93-3926-469b-a8ff-9a09e3bdbeae
-

புதுவை: மாப்­பிள்­ளையை மகிழ்ச்­சி­படுத்­தும் வித­மாக மாம­னார் செய்த சீர்­வ­ரிசை (படம்) புதுவை மக்­களை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்தி உள்­ளது.

ராஜ­முந்­தி­ரியை சேர்ந்­த­வர் பல­ரா­ம­கி­ருஷ்ணா. இவ­ரது மகள் பிரத்­யு­ஷா­வுக்­கும் ஏனாம் பகு­தி­யைச் சேர்ந்த பவன்­கு­மார் என்­ப­வ­ருக்­கும் கடந்த மாதம் 21ஆம் தேதி திரு­ம­ணம் நடை­பெற்­றது.

இதை­ய­டுத்து புகுந்த வீடு சென்ற பிரத்­யு­ஷாவை கண­வன் வீட்­டார் நன்­றா­கக் கவ­னித்­துக் கொள்­வ­தாக பல­ரா­ம­கி­ருஷ்­ணா­வுக்­குத் தெரி­ய­வந்­தது.

இத­னால் மகிழ்ச்சி அடைந்த அவர், புது­ம­ணத் தம்­ப­தி­யர்க்கு ஆடி சீர் வரிசை அனுப்பி வைத்­துள்­ளார். சீர்­வ­ரி­சை­யில் இடம்­பெற்­றுள்­ள­வை­தான் மக்­களை வியக்க வைத்­துள்­ளது.

ஆயி­ரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு­கள், 50 கோழி­கள், ஆயி­ரம் கிலோ காய்­கறி, 250 கிலோ மளி­கைப் பொருட்­கள், 250 கிலோ ஊறு­காய், 50 வகை இனிப்­பு­கள் ஆகி­ய­வை­தான் அந்­தப் பொருள்­கள்.

ஏரா­ள­மான வண்­டி­களில் அவற்றை ஏற்றி மக­ளின் புகுந்த வீட்­டுக்கு அனுப்பி வைத்­துள்­ளார் பல­ரா­ம­கி­ருஷ்ணா.

சாலையில் சென்றபோது அந்த வண்­டி­க­ளின் அணி­வ­குப்பை ராஜ­முந்­திரி, ஏனாம் பகுதி மக்­கள் பார்த்து வியந்­த­னர்.