திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம்: அண்ணாமலை திட்டவட்டம்

1 mins read
fc96aa67-dba5-4c0b-b6c5-a637b646b997
-

மதுரை: திமுக ஆட்­சி­யின் தவறு­களை சுட்­டிக்­காட்ட பாஜக தயங்­காது என அக்­கட்­சி­யின் தமி­ழ­கத் தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

ஆட்­சி­யா­ளர்­க­ளின் தவ­று­கள் குறித்து தயக்­க­மின்­றிப் பேசி­னால்­தான் மக்­கள் ஆத­ரவு கிடைக்­கும் என்று மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

தற்­போ­துள்ள அர­சி­யல் சூழ­லில் திமு­க­வுக்கு பாஜ­க­தான் எதிரி என்­றும் இந்த அடிப்­ப­டை­யில் தான் தமி­ழக அர­சி­யல் களம் நகர்ந்து கொண்­டி­ருக்­கிறது என்­றும் அண்­ணா­மலை கூறி­னாரா்.

"ஒன்று வாங்­கி­னால் ஒன்று இல­வ­சம் என்­பது போல திமு­க­வில் தற்­போது மூன்று முதல்­வர்­கள் உள்­ள­னர். இது­தான் திமு­க­வின் சித்­தாந்­தம்.

"பாஜக நிர்­வா­கி­கள், தொண்­டர்­களைச் சந்­தித்து வரு­கி­றேன். ஊர­டங்கு தளர்­வால் உள்­ள­ரங்கு கூட்­டங்­களை நடத்த உள்­ளோம்," என்­றார் அண்­ணா­மலை.

பாஜக சிந்­தாந்த அடிப்­ப­டை­யில் செயல்­ப­டக்­கூ­டிய கட்சி என்று குறிப்­பிட்ட அவர், பிர­த­மர் மோடி அறி­வித்த நலத் திட்­டங்­கள் மூலம் தமி­ழ­கத்­தில் மூன்­றரை கோடி மக்­கள் பலன் அடைந்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். இத­னால் அடுத்து வரும் தேர்­த­லில் பாஜ­க­வுக்கு வெற்றி வாய்ப்பு நன்­றாக உள்­ளது என்­றார் அண்­ணா­மலை.

"பாஜக எப்­போ­துமே தனி மனித கருத்­து­ரி­மைக்கு மதிப்­ப­ளிக்­கும். யாரு­டைய பேச்­சை­யும் ஒட்டுக்கேட்க வேண்­டிய அவ­சி­யம் எழ­வில்லை. எனவே அடிப்­ப­டை­யில் குற்­றம் சாட்­டு­வதை ஏற்க இய­லாது.

"பல­ரது கைபேசி ஒட்டுக் கேட்­கப்­பட்­ட­தாக அரசியல் கார­ணங்­களை முன்­னி­றுத்தி, ஒரு குறிப்­பிட்ட ஊட­கம் இவ்­வாறு செய்தி வெளி­யிட்­டுள்­ளது," என்று அண்­ணா­மலை மேலும் தெரி­வித்­தார்.