மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகம்: தமிழகம் முதலிடம்

மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகம்: தமிழகம் முதலிடம்

2 mins read
71858e07-0c33-4ed6-91c9-3d7300c61e3c
தொற்றுப்பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் குவிந்தனர். படம்: ஊடகம் -

மா.சுப்பிரமணியன்: தடுப்பூசிகளை வீணடிக்காமல் 300,000 பேருக்கு கூடுதலாக போடப்பட்டுள்ளது

சென்னை: ஜூலை மாதம் மாநி­லங்­க­ளுக்­கான கொரோனா தடுப்­பூசி ஒதுக்­கீட்டின் கீழ் தமி­ழ­கத்­துக்கு கூடு­த­லாக 500,000 தடுப்­பூ­சி­களை வழங்­கு­வ­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ள­து என தமி­ழக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய அரசு அனுப்­பும் தடுப்­பூ­சி­களை அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் உட­ன­டி­யாக பிரித்து அனுப்­பு­வ­தி­லும் அவற்றை முழு­வ­து­மாக பயன்­ப­டுத்­து­வ­தி­லும் நாட்­டி­லேயே தமி­ழ­கம் தான் முதல் மாநி­ல­மா­கத் திகழ்­கிறது என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­துக்குத் தேவைப்­படும் தடுப்பூசிகளின் எண்­ணிக்கை குறித்து மத்­திய அர­சி­டம் தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்த அவர், இது­வரை 18,032,170 தடுப்­பூ­சி­கள் பெறப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

"மத்­திய அர­சி­டம் இருந்து பெற்­ற­தில் இது­வரை 18,003,777 தடுப்­பூ­சி­கள் பய­னா­ளி­க­ளுக்­குப் போடப்­பட்ட நிலை­யில், 342,820 தடுப்­பூ­சி­கள் கையி­ருப்­பில் உள்­ளன.

"நாள்­தோ­றும் மாநில அர­சி­டம் எவ்­வ­ளவு தடுப்­பூ­சி­கள் மீத­முள்­ளன என்­பது குறித்த விவ­ரங்­களை மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை மின்­னஞ்­சல் மூலம் மத்­திய அர­சி­டம் தெரி­விக்­கும்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

மாநி­லங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட தடுப்­பூ­சி­களில் எந்­தெந்த மாநி­லங்­கள் அவற்றை விரை­வா­கப் பயன்­ப­டுத்­து­கின்­றன என்­பதை மத்­திய அரசு கூர்ந்து கவ­னித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இந்­தப் பணியை தமி­ழக அரசு சிறப்­பா­கச் செயல்­ப­டுத்தி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

மத்­திய அர­சி­டம் இருந்து வரக்­கூ­டிய தடுப்­பூ­சி­கள் எந்­த­வித தாம­தத்­துக்­கும் இடம்­கொ­டுக்­காத வகை­யில் அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் உரிய வகை­யில் உட­ன­டி­யாக பிரித்து அனுப்­பப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் மேலும் கூறி­னார்.

"கடந்த அதி­முக ஆட்­சி­யில் சுமார் 400,340 தடுப்­பூ­சி­கள் வீண­டிக்­கப்­பட்­டன. ஆனால் நடப்பு ஆட்­சி­யில், அதை­யும் சமன் செய்­கிற அள­வில் சுமார் 300,000 தடுப்­பூ­சி­கள் கூடு­த­லாக போடப்­பட்­டுள்­ளன.

"இந்­தத் தக­வலை தமி­ழக முதல்­வர் அண்­மை­யில் பிர­த­மர் முன்­னி­லை­யி­லேயே தெரி­வித்­தி­ருக்­கி­றார்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பிர­ம­ணி­யன்.

தமி­ழ­கத்தைப் பொறுத்­த­வரை 12 கோடி தடுப்­பூசி தேவை என்று குறிப்­பிட்ட அவர், இது­வரை 1.80 கோடி பேருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது என்­றார்.

தின­மும் 7 லட்­சம் வீதம் மாதம் 2 கோடி பேருக்கு தடுப்­பூசி போடும் கட்­ட­மைப்பு வச­தி­கள் தமி­ழ­கத்­தில் இருப்­ப­தாக அவர் குறிப்பிட்டார்.

"ஆனால் தின­மும் நான்கு முதல் ஐந்து லட்­சம் தடுப்­பூ­சி­கள்­தான் தமி­ழ­கத்­துக்கு கிடைக்­கிறது. மத்­திய அரசு பத்து கோடி தடுப்­பூ­சி­களை விரை­வாக தரும் பட்­சத்­தில் அடுத்த நான்­கைந்து மாதங்­க­ளுக்­குள் தமி­ழ­கத்­தில் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­பட்­டு­வி­டும்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பிர­ம­ணி­யன்.