சென்னை: கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் மது விருந்து நடத்திய துணை நடிகை கவிதாஸ்ரீ உள்பட 16 மீது போலிசார் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை மீதியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நள்ளிரவு வேளையில் அந்தப் பண்ணை வீட்டில் அரைகுறை ஆடையில் சில பெண்கள் நடனமாடுவதாகவும் அனைவரும் மது அருந்துவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து போலிசார் அங்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 34 வயதான ஸ்ரீஜித்குமார் என்பவர் திரைப்படத் துணை நடிகை கவிதா ஸ்ரீயுடன் சேர்ந்து மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
1994 ஆம் ஆண்டு வெளிவந்த 'காதலன்' படத்தில் முரட்டு காவல்துறை அதிகாரியாக நடித்தவர் கவிதாஸ்ரீ.
அக்குறிப்பிட்ட பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அவர் மது விருந்துகளை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நடனமாட பத்து பெண்கள், உயர் ரக மது வகைகள், அசைவ உணவு என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்து நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் தலா ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

