'தமிழக பொருளியல் மதிப்பு டிரில்லியன் டாலராக மாறும்'

'தமிழக பொருளியல் மதிப்பு டிரில்லியன் டாலராக மாறும்'

2 mins read
54a6927f-003d-4861-a368-3655786e13ff
மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம். -

முதல்வர் ஸ்டாலின்: முதலீட்டாளர்களுக்கு உகந்த வணிக சூழலை உருவாக்குவோம்

சென்னை: தெற்­கா­சி­யா­வில் தொழில் புரி­வ­தற்கு உகந்த மாநி­ல­மா­கத் தமி­ழ­கத்தை உயர்த்­து­வதே திமுக அர­சின் லட்­சி­யம் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

எதிர்­வ­ரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒரு லட்­சம் கோடி அமெ­ரிக்க டாலர்­கள் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி கொண்ட பொரு­ளா­தா­ர­மாக தமி­ழ­கத்தை உரு­வாக்­கு­வதே தமது தலை­மை­யி­லான அர­சின் குறிக்­கோள் என்­றும் அவர் கூறினார்.

சென்­னை­யில் நேற்று முன்­ தி­னம் தமி­ழக அர­சின் தொழில்­துறை சார்­பாக 'முத­லீட்­டா­ளர்­க­ளின் முதல் முக­வரி - தமிழ்­நாடு' என்ற கருப்­பொ­ரு­ளி­ல் அரசு விழா நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்­வர் ஸ்டா­லின், அர­சின் புதிய இலக்கை நோக்­கிப் பய­ணிக்க முத­லீட்­டா­ளர்­கள் ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டும் எனக் கேட்­டுக் கொண்­டார்.

"எங்கள் நோக்கம் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்றுவதாகும். இதற்கான உகந்த வணிக சூழலை முதலீட்டாளர்களுக்கு வழங்குவோம்.

"இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு திமுக பத­விக்கு வந்­த­போது மாநி­லத்­தின் நிதி நிலை அவ்­வ­ளவு சிறப்­பாக இல்லை. ஆனால் இப்­போது பொரு­ளா­தா­ரம் மெல்ல மீண்டு வரு­கிறது," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் புதிய நிறு­வ­னங்­க­ளுக்­கும் தமி­ழக அரசு அனைத்து வகை­யி­லும் ஒத்­து­ழைப்பு வழங்­கும் என்று குறிப்­பிட்ட அவர், புதிய தொழில் திட்­டங்­கள் மூலம் ஆயி­ரக்­க­ணக்­கான வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றார்.

இதை­ய­டுத்து பேசிய தமி­ழக தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு, தமி­ழ­கத்­திற்கு வரும் ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ருக்­கும் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் வழி­காட்டி உத­வ முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

எதிர்­வ­ரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் தமி­ழ­கத்­திற்கு 23 லட்­சம் கோடி ரூபாய் முத­லீ­டு­களை ஈர்த்து, 46 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட புதிய வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்­டும் என்­பதே அரசின் இலக்கு என தொழில்­துறை செய­லா­ளர் முரு­கா­னந்­தன் தெரி­வித்­தார்.