சென்னை: தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம், மின்சார நிலையங்கள், மின்னணு பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தொழிற்பூங்காக்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளித் தொழிற்சாலைகள் ஆகியவை தமிழகத்தில் அமையும் என தமிழக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

