பாலியல் தொழில்: சிக்கும் குடும்பப் பெண்கள்

பாலியல் தொழில்: சிக்கும் குடும்பப் பெண்கள்

1 mins read
9be84eba-6451-4d41-a590-440c13e17838
-

மதுரை: கொரோனா நெருக்கடியால் வருமானத்தை இழந்து தவிக்கும் குடும்பப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை மதுரையில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இடைத்தரகர் ஒருவரும் இரு பெண்களும் மதுரை போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பாலியல் தொழிலில் உள்ள பெண்களைக் கொண்டு குடும்பப் பெண்களிடம் பேசி, மூளைச் சலவை செய்கிறார்கள் இடைத்தரகர்கள்.

திடீரென குடும்ப வருமானம் நின்று போவதால் அவதிப்படும் குடும்பப் பெண்களைத்தான் இந்த இடைத்தரகர்கள் அதிகம் குறி வைப்பதாகவும் அவர்களிடம் சிக்கிக் கொண்டு பாலியல் தொழிலில் இருந்து விடுபட முடியாமல் பல பெண்கள் தவிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.