கைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டனப் போராட்டம்

கைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டனப் போராட்டம்

1 mins read
ce8f4fd6-278c-4886-89b5-37439405dfac
-

சென்னை: நாட்­டில் முக்­கிய பிர­மு­கர்­க­ளின் கைபேசி ஒட்­டுக் கேட்­கப்­பட்­ட­தாக வெளி­யான தக­வலை அடுத்து எதிர்க்­கட்­சி­கள் மத்­திய அரசை சர­மா­ரி­யாக விமர்­சித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், இந்த விவ­காரத்­துக்­குப் பொறுப்­பேற்று மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா பதவி விலக வலி­யு­றுத்தி காங்­கி­ரஸ் சார்­பாக இன்று போராட்­டம் நடத்­தப்­படும் என அதன் மாநி­லத் தலை­வர் கே.எஸ். அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்தி, அவ­ரது அலு­வ­லக ஊழி­யர்­க­ளின் கைபே­சி­களும் ஒட்டு கேட்­கப்­பட்­ட­தாக அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்ள அவர், 2019ஆம் ஆண்டு நடந்த மக்­க­ள­வைத் தேர்­த­லின்­போது பெகா­ஸஸ் செயலி பயன்­படுத்­தப்­பட்­டுள்­ள­தாக வந்­துள்ள செய்­தி­கள் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

"எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள், வழக்­க­றி­ஞர்­கள், சமூ­கச் செயற்­பாட்­டா­ளர்­களின் கைபே­சி­கள் ஒட்­டுக் கேட்­கப்­பட்­டது தெளி­வா­கத் தெரி­கிறது.

"இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக, உச்ச நீதி­மன்­றக் கண்­காணிப்­பின் கீழ் நீதி விசா­ரணை நடத்­தக் கோரி­யும் அமித் ஷா வில­கக் கோரி­யும் போராட்­டம் நடை­பெ­றும்," என கே.எஸ். அழ­கிரி மேலும் தெரி­வித்­துள்­ளார்.