தமிழகம்: 90 லட்சம் பேர் மதுவுக்கு அடிமை

தமிழகம்: 90 லட்சம் பேர் மதுவுக்கு அடிமை

1 mins read
8b3a5554-a5ab-476c-b802-e3408c695e4e
-

புது­டெல்லி: தமி­ழ­கத்­தில் சுமார் 90 லட்சத்துக்­கும் (9 மில்லியன்) அதி­க­மா­னோர் மதுப்­ப­ழக்­கத்­துக்கு அடிமை­யாக உள்­ள­தாக மத்­திய சமூக நீதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­திய அள­வில் உத்­த­ரப் பிரதேச மாநி­லத்­தில்­தான் மது­வுக்கு அடி­மை­யா­னோர் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது. அங்கு சுமார் 3.8 கோடி (38 மில்­லி­யன்) பேருக்கு மதுப்­ப­ழக்­கம் உள்­ளது. இதே­போல், நாடு முழு­வ­தும் சுமார் 15 கோடி (150 மில்­லி­யன்) பேருக்கு மது அருந்­தும் பழக்­கம் உள்­ளது என நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு மத்­திய அர­சின் சமூக நீதி அமைச்சு பதில் அளித்­துள்­ளது.

"தமி­ழ­கத்­தில் சுமார் 100,004 பேர் அதிக போதைக்­காக கஞ்சா பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். மேலும் 154,000 பேர் போதை மாத்­தி­ர­களை உட்­கொள்­கி­றார்­கள். மாநி­லம் முழு­வ­தும் சுமார் ஒன்பது மில்­லி­யன் பேருக்கு மதுப்­பழக்­கம் தீவிர நிலை­யில் உள்­ளது," என சமூக நீதி அமைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.

நாட்­டில் மதுப்­ப­ழக்­கம், கஞ்சா, போதை மாத்­தி­ரைக்கு எவ்­வ­ளவு பேர் அடி­மை­யாக உள்­ள­னர் என்று உறுப்­பி­னர் ஒரு­வர் கேள்வி எழுப்பி இருந்­தார். தமி­ழ­கத்­தில் மது உற்­பத்தி ஆலை­க­ளை­யும் மதுக்­க­டை­க­ளை­யும் மூட வேண்­டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். ஊர­டங்­கின் போது கூட மதுக்­க­டை­களை திறக்க வேண்­டுமா என்று கேள்வி எழுந்த நிலையில், இந்தப் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.