பிரபல பின்னணிப் பாடகியின் 15 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை: ஐந்து பேர் கைது

பிரபல பின்னணிப் பாடகியின் 15 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை: ஐந்து பேர் கைது

1 mins read
6e50c3ee-6ce1-43f9-a261-44ab7d51b00e
-

சென்னை: பிர­பல பின்­ன­ணிப் பாடகி­யின் 15 வயது மக­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுத்­தது தொடர்­பாக மேலும் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். இந்த வழக்­கில் இது­வரை ஐந்து பேர் கைதாகி உள்­ள­னர்.

ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த அப்­பா­டகி தென்­னிந்­திய மொழி­களில் பாடி வரு­கி­றார். தற்­போது ஒரு தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யி­லும் பங்­கேற்­றுள்­ளார்.

கண­வரைப் பிரிந்து வாழ்ந்து வரும் அவ­ர், அவ்­வப்­போது பணி நிமித்­த­மாக வெளியே செல்ல வேண்டி இருப்­ப­தால் சென்­னை­யில் உள்ள தனது தங்கை வீட்­டில் மகளை தங்க வைத்­துள்­ளார்.

கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக தனது சித்தி வீட்­டில் தங்­கி­யி­ருந்த அந்­தச் சிறு­மிக்கு அண்­மை­யில் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. அது­கு­றித்து தன் மக­ளி­டம் விசா­ரித்­துள்­ளார் அந்­தப் பாடகி.

அப்­போது சித்­தி­யின் கண­வ­ரும் அவ­ரது உற­வி­னர் ஒரு­வ­ரும் தமக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தா­கச் சிறுமி கூறி­னார். மேலும் சித்­தி­யும் இதற்கு உடந்­தை­யாக இருந்­த­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் பாடகி கடும் அதிர்ச்சி அடைந்த நிலை­யில், அவ­ரது தங்கை குறிப்­பிட்ட தேவா­ல­யத்­துக்கு அடிக்­கடிச் சென்று வந்­த­தும் அங்­குள்ள மத­போ­த­கர் ஒரு­வர் தன் மக­ளி­டம் அத்­து­மீ­றி­ய­தும் அவ­ருக்­குத் தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து காவல்­து­றை­யில் அவர் புகார் அளித்­த­தன் பேரில் சிறு­மி­யின் சித்தி, சித்­தப்பா, உறவி­னர் மகன், மத­போ­த­கர் ஆகிய நால்­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்த நிலை­யில் சிறு­மி­யின் மாமன் முறை­யில் உள்ள ராஜேந்­தி­ரன் என்­ப­வ­ரும் இவ்­வாறு மோச­மாக நடந்து கொண்­டது தெரி­ய­வந்­தது. அவ­ரும் இப்­போது போக்சோ சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.