தடுப்பூசி போடாத நாய்களிடம் 'பார்வோ' கிருமி பரவும் ஆபத்து

தடுப்பூசி போடாத நாய்களிடம் 'பார்வோ' கிருமி பரவும் ஆபத்து

1 mins read
28694773-66b7-44cd-918c-cb971bfee41b
-

சென்னை: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், 'பார்வோ' கிருமித்தொற்றால் நாய் போன்ற செல்லப் பிராணிகள் பாதிக்கப்படும் அபாயம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.முறைப்படி தடுப்பூசி போடாததே இதற்குக் காரணம் என கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காற்றின் வழி வேகமாகப் பரவும் கெனைன் பார்வோ கிருமித் தொற்று விலங்குகளை மட்டுமே தாக்கும். கால்நடைகளிடம், அதிலும் குறிப்பாக நாய்களிடம் இது வேக மாகப் பரவும். தொற்றால் பாதிக்கப் படும் நாய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிடில் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டாலும் நம்மை நம்பியிருக்கும் உயிர்களையும் காக்கவேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோரால் தங்களது செல்லப் பிராணிகளை கவனிக்க இயலவில்லை. இதனால் தான் நாய்களுக்கு பார்வோ கிருமி பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.